Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2013 ல் திருமணம் - ஜி.வி.பிரகாஷ்

2013 ல் திருமணம் - ஜி.வி.பிரகாஷ்
, புதன், 2 ஜனவரி 2013 (12:08 IST)
FILE
2013 ல் திருமணம் செய்யப் போகிறேன்.... இதுதான் ஜி.வி.பிரகாஷின் புத்தாண்டு செய்தி.

இவருக்கும் பின்னணி பாடகி சைந்தவிக்கும் பல வருடங்களாக காதல். சின்ன வயசு என்பதாலும் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததாலும் திருமணத்தை தள்ளி வைத்தனர். இப்போது மேளம் கொட்டுவதற்கான நேரம் தகைந்திருக்கிறது.

இந்தியில் அனுராக் காஜ்யபின் படத்துக்கு இசையமைத்து தன்னை நிரூபித்த ஜி.வி.பிரகாஷுக்கு இந்த வருடம் செம கலக்கலாக இருக்கப் போகிறது. விஜய் படம் தொடங்கி பாரதிராஜாவின் அன்னக்கொடி, அனுராக்கின் அக்ளி என ஏகப்பட்ட படங்கள். இந்த சந்தோஷ வருடத்தில் திருமணத்தையும் நடத்திடலாம் என முடிவெடுத்து அறிவிப்பும் வெளியிட்டிருக்கிறார்.

இனி நாள் குறிக்க வேண்டியதுதான் பாக்கி.

Share this Story:

Follow Webdunia tamil