Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா -12 தமிழ்ப்படங்கள் திரையிடல்

Webdunia
ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (08:44 IST)

சென்னையில் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி சர்வதேச திரைப்பட விழா தொடங்க உள்ளது. தொடர்ந்து 16 ஆவது ஆண்டாக இந்த விழா சென்னையில் நடத்தப்படுகிறது.
 

இண்டோ சினி அப்ரிசேஷன்ஸ் பவுண்டேஷன்ஸ் ஏற்பாடு செய்திருக்கும் 16 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 13 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. 59 நாடுகளை சேர்ந்த மொத்தம் 150 திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்படுகின்றன.

இதில் 12 தமிழ்மொழி திரைப்படங்களும் திரையிடப்பட இருக்கிறது. அதில் 96, பரியேறும் பெருமாள், இரும்புத்திரை,அபியும் அனுவும், அண்ணனுக்கு ஜே,கடைக்குட்டி சங்கம், வடசென்னை, வேலைக்காரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன் ஆகியப் படங்கள் திரையிடப்படுகின்றன. மேலும் சிறப்புத் திரையிடலாக மேற்கு தொடர்ச்சி மலை படமும் திரையிடப் படுகிறது.

திரைப்படங்கள் தேவி சினிப்ளக்ஸ், கேஸினோ, அண்ணா தியேட்டர், ரஷ்யன் கலாச்சார மையம், சத்யம் சினிமாஸ், தாகூர் திரைப்பட மையம் ஆகிய இடங்களில் திரையிடப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

க்யூட் லுக்கில் கலக்கும் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

தனுஷுக்கு ஜோடியான மமிதா பைஜு.. எந்த படத்தில் தெரியுமா?

கேம்சேஞ்சர் படத்தில் அது சரியாக இல்லை… இசையமைப்பாளர் தமன் கருத்து!

அந்த நடிகை என் ஆடைகளை மாற்ற சொன்னார்… பிரபல தொகுப்பாளர் DD பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments