ஜில்லாவை இயக்கிய நேசன் துப்பாக்கியைத் தாண்டி ஜில்லா வசூலித்தது என்றார். ஆனால் அவையெல்லாம் பொய் என்கிறார் இந்த தயாரிப்பாளர். அவர், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் கேயார்.
பாடல்கள் வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய கேயார், இந்த வருடம் வெளியானதில் லாபம் சம்பாதித்தது கோலிசோடா மட்டுமே. பெரிய பட்ஜெட் படங்கள் என்று சொல்லப்பட்டவை எல்லாம் பயங்கர லாஸ் என தெரிவித்தார்.
பெயர் குறிப்பிடவில்லை எனினும் இந்த வருடம் வெளியான பரிய பட்ஜெட் படங்களான ஜில்லாவையும், வீரத்தையுமே அவர் குறிப்பிட்டார் என்பது வெளிப்படை. இந்தப் படங்களை தயாரித்தவர்களுக்கு பைசா தேறலை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருப்பவர்... ஆதாரமில்லாமல் இப்படி பேச வாய்ப்பில்லை. சம்பந்தப்பட்டவர்கள் இந்த கமெண்டுக்கு கம்மென்று இருப்பதுதான் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.