Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹ‌ரியின் வேகம்

ஹ‌ரியின் வேகம்
, வியாழன், 1 ஜூலை 2010 (15:26 IST)
ச‌ரியாகதான் பெயர் வைத்திருக்கிறார்கள்...Harry. ஒரு படம் முடியும்முன் அடுத்தப் படத்தை அறிவித்து கதை விவாதத்தை தொடங்கிவிடுவது ஹ‌ரியின் ஸ்டைல். இடையில் வந்த சேவல் ச‌ரியாக கூவாததால் சிறிது சுணக்கம் ஏற்பட்டது.

இந்த எதிர்பாராத தாமதத்தை சிங்கத்தின் வெற்றி துடைத்தெறிந்திருக்கிறது. இந்த வருடம் வெளியான தமிழ் திரைப்படங்களில் அனைத்துத் தரப்பினருக்கும் அதிக லாபம் சம்பாதித்துக் கொடுத்தப் படம் என்ற பெருமையை சிங்கம் தட்டிச் சென்றுள்ளது.

சிங்கம் வெளியான மறுநாளே தனுஷை வைத்து இயக்கும் படத்தின் கதை விவாதத்தை முறைப்படி தொடங்கிவிட்டார் ஹ‌ரி. தற்போது அவரது டீம் மகாபலிபுரத்தில் முகாமிட்டு கதை விவாதத்தை நடத்தி வருகிறது.

தனுஷ் படம் முடிந்தப் பிறகு சிங்கத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் ஐடியாவும் ஹ‌ரியிடம் இருப்பதாக கூறுகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil