Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைதராபாத்தில் மாப்பிள்ளை

Webdunia
புதன், 12 ஆகஸ்ட் 2009 (16:45 IST)
ர‌ஜினியின் மாப்பிள்ளை படத்தின் ‌‌ரீமேக்கில் தனுஷ் நடிப்பது தெ‌ரியும். சுரா‌ஜ் இயக்கும் இந்த ‌‌ரீமேக்கிற்கு மாப்பிள்ளை என்றே பெயர் வைத்துள்ளனர். தனுஷுக்கு ஜோடியாக நடிப்பவர் ஹன்ஷிகா.

தனுஷின் குட்டி படம் ஏறக்குறைய முடிந்துவிட்டது. தெலுங்கில் வெற்றிபெற்ற ஆர்யா படத்தின் ‌‌ ர ீமேக் இது. யாரடி நீ மோகினியை இயக்கிய ஜவஹர் படத்தை இயக்கியிருக்கிறார். தனுஷுக்கு ஜோடி, ஸ்ரேயா.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஆடுகளம் பட வேலைகளும் தொடங்கிவிட்டன. இந்நிலையில் மாப்பிள்ளை படத்தின் படப்பிடிப்பையும் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

அடுத்த வாரம் ஹைதராபாத்தில் மாப்பிள்ளை படத்தின் ஷூட்டிங்கை சுரா‌ஜ் தொடங்குகிறார். தனுஷ், ஹன்ஷிகா படப்பிடிப்பில் கலந்து கொள்கின்றனர். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஆடுகளம் படத்திற்குமுன் மாப்பிள்ளை படத்தை ‌ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments