Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹீரோவாகத் துடிக்கும் வேலையில்லா பட்டதாரி வில்லன்

ஹீரோவாகத் துடிக்கும் வேலையில்லா பட்டதாரி வில்லன்
, செவ்வாய், 22 ஜூலை 2014 (17:03 IST)
வேலையில்லா பட்டதாரி படத்தில் வில்லனாக நடித்தவர் அமிதேஷ். பெயர்தான் வில்லன். பூனை எலியை வைத்து விளையாடுவது போல்தான் படத்தில் தனுஷ் - அமிதேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் வரும். 
 
அமிதேஷ் கர்நாடகாவைச் சேர்ந்தவர். தற்போதைய வாசம் சென்னை. சினிமாதான் அமிதேஷின் கனவு, உணவு எல்லாம். இசையமைப்பாளர் அனிருத் இவருடைய பால்யகால சினேகிதர்.
அனிருத் மூலமாக அமிதேஷுக்கு தனுஷின் அறிமுகம் கிடைத்தது. உடனேயே தனது வேலையில்லா பட்டதாரியில் அவருக்கு வில்லனாக வாய்ப்பு வழங்கினார்.
 
முதல் படம் வில்லன் என்றாலும் ஹீரோவாக வேண்டும் என்பதே இவரது விருப்பம். தோற்றமும் வில்லனைவிட ஹீரோவுக்குதான் பொருத்தம். வேலையில்லா பட்டதாரியில் தனுஷ் இவரை அழைக்கும் அமுல்பேபி அடைமொழிக்கு அப்படியே அர்த்தம் சேர்க்கிற நிறம், களை, முகம். 
 
ஹீரோ பஞ்சத்தில் இருக்கும் தமிழ் சினிமா அமிதேஷை விரைவிலேயே ஹீரோவாக்கிவிடும். யார் கண்டது. தனுஷே அமிதேஷை வைத்து ஒரு படம் தயாரிக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil