Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாலிவுட்டுக்கு போட்டியாக விஜய்

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2009 (19:03 IST)
18 ஆம் தேதி வேட்டைக்காரனை வெளியிட தீர்மானித்திருக்கிறார்கள். போட்டிக்கு அ‌ஜித், சூர்யா என்று யாருமில்லை. ர‌ஜினி, கமல் படங்களுமில்லை. ஆனாலும் புளி கரைக்கிற மாத ி‌ ர ி ஒரு போட்டியாளர் இருக்கிறார். அவரது பூர்வீகம் ஹாலிவுட் என்பதுதான் கலவர செய்தி.

ஜ ேம்ஸ் கேமரூனை யாரும் மறந்திருக்க முடியாது. டைட்டானிக் படத்தின் மூலம் கரன்ஸியையும், ஆஸ்கரையும் அள்ளியவர். அவரது பிரமாண்ட படைப்பு அவதார். சுமார் 1.500 கோடி ரூபாயில் அவதார் தயாராகியிருக்கிறது. உலகை கலக்கிக் கொணடிருக்கும் 2012 படத்தைவிட பல மடங்கு பிரமாண்டம்.

அவதார் 18ஆம் தேதி திரைக்கு வருகிறது. வேட்டைக்காரன் வெளியாகும் அதே நாள். 2012 படத்துக்கு ரசிகர்கள் திரண்டதைப் பார்த்து திரையரங்கு உ‌ ரிமையாளர்களே மிரண்டு போனார்கள். பல தமிழ்ப் படங்களைவிட இந்த ஹாலிவுட் படம் அதிகம் வசூலித்தது.

18 ஆம் தேதி வெளியாகும் அவதாருக்கு 2012 படத்தைவிட பல மடங்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. விட்டால் வேட்டைக்காரனையே விழுங்கிவிடும் என்பது விமர்சகர்களின் கருத்து.

தேனாண்டாள் பிலிம்ஸ் மாத ி‌ ர ி விளம்பரத்தில் பிரமாதப்படுத்தும் விநியோகஸ்தர்கள் கிடைத்தால் வேட்டைக்காரனை அவதார் ஓவர் டேக் செய்தாலும் ஆச்ச‌ரியமில்லை.

ஹாலிவுட்டா? உள்ளூர் கில்லியா? போட்டி காத்திருக்கிறது.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments