Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹாலிவுட்டுக்கு போட்டியாக விஜய்

ஹாலிவுட்டுக்கு போட்டியாக விஜய்
, வியாழன், 3 டிசம்பர் 2009 (19:03 IST)
18ஆம் தேதி வேட்டைக்காரனை வெளியிட தீர்மானித்திருக்கிறார்கள். போட்டிக்கு அ‌ஜித், சூர்யா என்று யாருமில்லை. ர‌ஜினி, கமல் படங்களுமில்லை. ஆனாலும் புளி கரைக்கிற மாதி‌ி ஒரு போட்டியாளர் இருக்கிறார். அவரது பூர்வீகம் ஹாலிவுட் என்பதுதான் கலவர செய்தி.

ேம்ஸ் கேமரூனை யாரும் மறந்திருக்க முடியாது. டைட்டானிக் படத்தின் மூலம் கரன்ஸியையும், ஆஸ்கரையும் அள்ளியவர். அவரது பிரமாண்ட படைப்பு அவதார். சுமார் 1.500 கோடி ரூபாயில் அவதார் தயாராகியிருக்கிறது. உலகை கலக்கிக் கொணடிருக்கும் 2012 படத்தைவிட பல மடங்கு பிரமாண்டம்.

அவதார் 18ஆம் தேதி திரைக்கு வருகிறது. வேட்டைக்காரன் வெளியாகும் அதே நாள். 2012 படத்துக்கு ரசிகர்கள் திரண்டதைப் பார்த்து திரையரங்கு உ‌ரிமையாளர்களே மிரண்டு போனார்கள். பல தமிழ்ப் படங்களைவிட இந்த ஹாலிவுட் படம் அதிகம் வசூலித்தது.

18ஆம் தேதி வெளியாகும் அவதாருக்கு 2012 படத்தைவிட பல மடங்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. விட்டால் வேட்டைக்காரனையே விழுங்கிவிடும் என்பது விமர்சகர்களின் கருத்து.

தேனாண்டாள் பிலிம்ஸ் மாதி‌ி விளம்பரத்தில் பிரமாதப்படுத்தும் விநியோகஸ்தர்கள் கிடைத்தால் வேட்டைக்காரனை அவதார் ஓவர் டேக் செய்தாலும் ஆச்ச‌ரியமில்லை.

ஹாலிவுட்டா? உள்ளூர் கில்லியா? போட்டி காத்திருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil