Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்ருதி, ஜெய் இணையும் ஜெகஜாலன்

ஸ்ருதி, ஜெய் இணையும் ஜெகஜாலன்
, வெள்ளி, 11 ஏப்ரல் 2014 (12:34 IST)
ஸ்ருதி தமிழில் நடித்த 7 ஆம் அறிவு, 3 இரு படங்களும் சுமாராகவே போயின. அடுத்து ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் பூஜையில் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில் அவர் ஒப்புக் கொண்டிருக்கும் மேலும் ஒரு படம் ஜெகஜாலன்.
ஜெய் நடிப்பில் பார்த்தி பாஸ்கர் இயக்கும் படம் இது. பார்த்தி பாஸ்கரின் முதல் படம் அர்ஜுனன் காதலி. அப்படம் தயாரிப்பில் இருக்கையில் வாமனன் தவிர என்னுடைய எந்தப் படமும் சரியில்லை, ஓடாது என்று ஜெய் சொன்ன வார்த்தைகள் திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியது நினைவிருக்கலாம். ஜெய்யின் வீட்டிலும் அது குழப்பத்தை ஏற்படுத்தியது. காரணம் பார்த்தி பாஸ்கர் தேவா வீட்டு மருமகன்.
 
அதன் பிறகு பார்த்தி பாஸ்கர் ஸ்ரீகாந்த் நடிப்பில் பம்பரகண்ணாலே படத்தை இயக்கினார். 
 
ஜெய் - பார்த்தி பாஸ்கர் இணையும் படம், பாதியில் நிற்கும் அர்ஜுனன் காதலி என்ற பேச்சு உள்ளது. அந்தப் படத்தைதான் மீண்டும் திருப்பி எடுக்கிறார்கள், பெயரையும் ஜெகஜாலன் என மாற்றியுள்ளனர் என்பது கோடம்பாக்கம் கிசுகிசுக்கும் ரகசியம்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil