Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்பெஷல் 26 ரீமேக்கில் விக்ரம்?

ஸ்பெஷல் 26 ரீமேக்கில் விக்ரம்?
, வியாழன், 10 ஏப்ரல் 2014 (19:54 IST)
அக்ஷய்குமாரின் வழக்கமான ஆக்ஷன் அடிதடி இல்லாமல் வெளியான படம் ஸ்பெஷல் 26. படத்தை இயக்கியவர் நீரஜ் பாண்டே. கமலின் உன்னைப்போல் ஒருவனின் ஒரிஜினலான ஏ வெட்னெஸ்டே படத்தை இயக்கியவர்.
Special 26
மும்பையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது. சில பேர் தங்களை சிபிஐ என்று சொல்லிக் கொண்டு சிபிஐ-க்கு இணையாக இன்னொரு போலி சிபிஐ-ஐ நடத்தி வருகிறார்கள். அனைவரும் வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள். ஆபரேஷனின் போது மட்டும் ஒன்று சேர்வார்கள். பெரிய முதலாளிகளின் கணக்கில் வராத பணத்தையெல்லாம் ரெய்டு என்ற பெயரில் அடித்துச் செல்வதுதான் இவர்களின் வேலை. 
 
தங்களின் நடவடிக்கைக்கு ஆட்கள் போதாமல் வருகையில் சிபிஐ-யில் சேர பட்டதாரிகள் தேவை என்று பத்திரிகையில் விளம்பரம் தந்து நேர்காணல் வைத்து ஆட்களை தேர்வு செய்யும் பலே கில்லாடிகள். இந்த கூட்டத்தின் தலைவர் அக்ஷய்.
 
தங்களைப் பற்றிய உண்மை தெரிந்த நிஜ சிபிஐ மற்றும் போலீசிடமிருந்து இவர்கள் எப்படி புத்திசாலித்தனமாக தாங்கள் திட்டமிட்ட கடைசி ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்தி, தப்பிக்கிறார்கள் என்பது கதை.
 
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் விக்ரம் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உண்மையாக இருந்தால் விக்ரமுக்கு இன்னொரு வெற்றிப் படம் உறுதி.

Share this Story:

Follow Webdunia tamil