Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெள்ளைக்கார துரை - ஒரு பாடலுக்கு ஆடும் மீனாட்சி

வெள்ளைக்கார துரை - ஒரு பாடலுக்கு ஆடும் மீனாட்சி
, செவ்வாய், 22 ஜூலை 2014 (15:09 IST)
கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் தஞ்சாவூர் பக்க முகத்தோற்றத்தில் அம்சமாக ஹோம்லியாக அறிமுகமானவர் மீனாட்சி. இவர்தாங்க தமிழச்சி என்றிருந்தது அவரது தோற்றம். ஆனால் அம்மணியின் பூர்வீகம் கொல்கத்தா. தமிழ் சினிமாவுக்காக இயக்குனர் மூர்த்தி வைத்ததுதான் மீனாட்சி பெயர்.
 
குத்தகைதாரருக்குப் பிறகு பல படங்களில் நடித்தவர் ஒரு கட்டத்தில் வாய்ப்பே இல்லாமல் காய்ந்து போனார். கரு.பழனியப்பனின் இன்டெலக்சுவல் சொதப்பல் மந்திரப்புன்னகையில் கடைசியாக மீனாட்சியைப் பார்த்து.
ஒருமுறை சினிமாவில் நடித்தால் அது விடாது கருப்பாக துரத்திக் கொண்டேயிருக்கும். மீனாட்சியை மட்டும் விடுமா? இதோ மீண்டும் வந்துவிட்டார். இந்தமுறை எழில் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் வெள்ளைக்கார துரை படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார் மீனாட்சி. சும்மாயிருப்பதற்கு ஒரு பாடல் மேல் என்று நினைக்கிற அளவுக்கு மீனாட்சியின் மார்க்கெட் படு டல்.
 
விக்ரம் பிரபு அரிமா நம்பி, சிகரம் தொடு படங்களில்தான் சமீபமாக நடித்து வந்தார். அதில் அரிமா நம்பி வெளியாகியிருக்கிறது. வெள்ளைக்கார துரையில் நடிக்க ஆரம்பித்ததாக தகவலே இல்லை. ஆனால் அக்டோபரில் படத்தை வெளியிட்டு விடுவோம் என்கிறார் எழில். எப்படிப்பா...?

Share this Story:

Follow Webdunia tamil