Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்கட்பிரபு படத்தில் நயன்தாரா?

Webdunia
சனி, 26 ஏப்ரல் 2014 (12:55 IST)
அஞ்சான் படம் முடிந்ததும் வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருடன் நயன்தாரா நடிக்கக்கூடும் என செய்திகள் கூறுகின்றன.
வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் முதலில் பரிசீலிக்கப்பட்டவர் ஸ்ருதி. அவர் விஷாலின் பூஜை படத்தில் கமிட்டானதால் அவருக்குப் பதில் நயன்தாராவை ஒப்பந்தம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமாக இது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
 

நயன்தாரா தற்போது ஜெயம் ரவியுடனும், உதயநிதியுடனும் நடித்து வருகிறார். தெலுங்கில் அவரை நடிக்க வைக்க அங்குள்ள முன்னணி நடிகர்களும், இயக்குனர்களும் ஆவலாக உள்ளனர்.

ஆனால் நயன்தாரா நடித்த அனாமிகா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளை அவர் முற்றாகப் புறக்கணித்ததால் தெலுங்கு திரையுலகம் அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளது. தெலுங்கில் நடிக்க அவருக்கு தடை விதிக்கப்படலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.
 
இப்படியொரு சூழலில் வெங்கட்பிரபு படத்தில் நடிக்க அழைப்பு வந்தால் நயன்தாராவுக்கு அது ஜாக்பாட். 
 
வெங்கட்பிரபு - சூர்யா இணையும் படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கிறது.

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

லிங்குசாமி மேல் அதிருப்தியில் கமல்ஹாசன்… காரணம் இதுதானா?

கதைகட்டுவது இதயத்தை நோகச்செய்கிறது… விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு சைந்தவி விளக்கம்!

Show comments