Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் யட்சன்

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் யட்சன்
, புதன், 16 ஏப்ரல் 2014 (12:22 IST)
ஆரம்பம் படத்துக்குப் பிறகு விஷ்ணுவர்தன் இயக்கும் படம் யட்சன். முன்பே தெரிவித்தது போல் ஆர்யா, விஷ்ணுவர்தனின் தம்பி கிருஷ்ணா இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
யட்சன் படத்துக்கு சுபா வசனம் எழுதுகின்றனர். ஆரம்பம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஓம் பிரகாஷ் யட்சனுக்கும் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், கலை இயக்கம் இளையராஜா, காஸ்ட்யூம் அனுவர்தன் என்று அப்படியே ஆரம்பம் டீம்.
 
யுடிவியுடன் இணைந்து விஷ்ணுவர்தனே படத்தை தயாரிக்கிறார். புறம்போக்கு, அஞ்சான் ஆகிய படங்களையும் யுடிவி இப்படி அந்தந்த படத்தின் இயக்குனர்களுடன் இணைந்தே தயாரித்து வருகிறது. இதனால் மொத்த பணத்தையும் இழக்கிற ரிஸ்க் யுடிவிக்கு இல்லை.
 
ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டுக்கு யட்சன் படத்தின் பூஜை எளிமையாக நடத்தப்பட்டது. என்றாலும் படப்பிடிப்பு இம்மாதம் 18 ஆம் தேதியே தொடங்குகிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil