Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஷாலுடன் ஜோ‌டி - குஷ்புவின் விபரீத ஆசை

விஷாலுடன் ஜோ‌டி - குஷ்புவின் விபரீத ஆசை
, புதன், 27 ஆகஸ்ட் 2014 (15:32 IST)
விஷாலுடன் ஜோ‌டி சேர ஆசையாக உள்ளது என குஷ்பு ஆட்டம் பாம் ஒன்றை வீசியுள்ளார்.
 
கருத்து என்ற பெயரில் அடிக்கடி பாம் வீசுவது குஷ்புவின் வழக்கமாகிவிட்டது. திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வது அப்படியொன்றும் தப்பில்லை என நடத்தைக்கு நியாயம் கற்பித்ததிலிருந்து தொடங்குகிறது குஷ்புவின் கருத்துப் புரட்சி. அதன் பிறகு பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்து கல்லடியும் அதே அளவுக்கு விளம்பரமும் பெற்றுக் கொண்டார். ட்விட்டரில் இணைந்த பிறகு குஷ்புவின் அதகளம் தொடர்கதையாகிவிட்டது.
 
தனக்குப் பிடித்த நடிகர் கார்த்திக் என்று ட்விட்டரில் கூறியுள்ளார் குஷ்பு. இவர் மட்டுமில்லை ரோஜா போன்ற பல நடிகைகள் எங்களின் சுற்றமும் நட்பும் எல்லாம் கார்த்திக்தான் என்று கூறியிருக்கிறார்கள். என்னுடைய வீட்டில் இருக்கும் ஒரே சினிமாக்காரரின் புகைப்படம் கார்த்திக்குடையது என்றும் குஷ்பு கூறியுள்ளார்.
 
மேலும், இப்போது உள்ள இளம் நடிகர்களில் விஷாலுடன் ஜோ‌டி சேர ஆசையாக உள்ளது என்று அதிர்ச்சியளித்துள்ளார். 
 
ஆன்ட்டி வயசில் இள வயசு ஹீரோக்களுடன் ஜோ‌டி சேர நினைப்பது விபரீத ஆசையா இல்லை தன்னம்பிக்கையா?
 
சுந்தர்.சி க்கே வெளிச்சம்.

Share this Story:

Follow Webdunia tamil