Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வில்லி... வில்லன்... மீண்டும் வில்லி

Webdunia
வெள்ளி, 6 ஜூன் 2014 (11:26 IST)
ரோமியோ ஜுலியட் படத்தை எப்படியும் தீபாவளிக்கு முன்பு கொண்டு வரவேண்டும் என்று வேலை பார்க்கிறார் இயக்குனர் லக்ஷ்மண். ஹன்சிகா, ஜெயம் ரவி நடிக்கும் இந்த ரொமான்டிக் காமெடியில் வில்லன் என்று யாருமில்லை.
இது நாம் சொன்னதில்லை, இயக்குனர் சொன்னது. பிறகு, ஹன்சிகாதான் படத்தின் வில்லி. அவரின் பொசஸிவ்னெஸ்தான் காதலுக்கு வில்லனாக இருக்கும் என்றார். ஓ.. அப்படியா என்று கேட்டு வைத்தோம். அதன் பிறகு, படத்தின் முதல் பாதியில் ஹன்சிகா வில்லி என்றால் இரண்டாவது பகுதியில் வில்லன் ஜெயம் ரவி என்றார். அதற்கும் ஒரு ஒ போட்டு திரும்பினால் இனிய சர்ப்ரைஸான பூனம் பஜ்வா.
ரோமியோ ஜுலியட்டில் பூனம் பஜ்வாவும் நடிக்கிறார். படத்தில் அவரது வேடம் குறித்து விசாரித்தால் விதவிதமாகச் சொல்கிறார்கள். கொஞ்சம் வில்லத்தனமான கேரக்டராம். ரோமியோ ஜுலியட்டில் ஹன்சிகா - ஜெயம் ரவி காதலுக்கு கட்டையை போடுவது இவர்தான் என்று கைகாட்டுகிறார்கள்.
 
சேவலில் அறிமுகமான பூனம் பஜ்வாவுக்கு அவரது குழந்தைத்தனமான முகத்துக்கு ஏற்ற வேடங்கள் இன்னும் அமையவில்லை. அவரைப் போய் வில்லியாக... எப்படி லக்ஷ்மண் சார் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க?
 

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments