Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் மணமகளாகும் அனுஷ்கா

Webdunia
வியாழன், 18 செப்டம்பர் 2014 (12:24 IST)
நடிகை அனுஷ்கா விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போகிறார். இதன் காரணமாகவே அவர் புதிய படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
அனுஷ்கா தெலுங்கில் பாகுபலி, ருத்ரம்மாதேவி ஆகிய படங்களிலும், தமிழில் லிங்காவிலும் நடித்து வருகிறார். இவை மூன்றும் முடிவுறும் நிலையில் உள்ளது. இருந்தும் புதுப்படங்கள் எதிலும் அவர் கமிட்டாகவில்லை.
 
சமீபத்தில் அவரை சந்தித்த உதவி இயக்குனர் ஒருவர், நாயகியை மையப்படுத்திய கதை ஒன்றை கூறியுள்ளார். கதை அனுஷ்காவுக்கு பிடித்திருந்த போதிலும், அந்த புராஜெக்டை அவர் ஒப்புக் கொள்ளவில்லை. தற்போது நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு அனுஷ்கா திருமணம் செய்து கொள்ளப் போகிறார், அதனால்தான் புதுப்படங்களை அவர் ஒப்புக் கொள்ளவில்லை என ஆந்திரா மீடியா கூறுகிறது.
 
அனுஷ்கா திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் ஒரு தொழிலதிபர், இருவரும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர் எனவும் ஆந்திராவில் பேசப்படுகிறது.
 

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments