Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விமல் படத்தைவிட குறைவான திரையரங்குகள் - விஜய்க்கு வந்த சோதனை

விமல் படத்தைவிட குறைவான திரையரங்குகள் - விஜய்க்கு வந்த சோதனை
, வெள்ளி, 16 ஆகஸ்ட் 2013 (10:56 IST)
விஜய் படத்துக்கு இப்படியொரு நிலைமை வரும் என்று கனவிலும் யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். நேற்று நடந்த திரையரங்கு உரிமையாளர்களின் கூட்டத்துக்குப் பிறகு பேசிய நிர்வாகிகள், சதவீத அடிப்படையில் மட்டுமே தலைவா படத்தை வெளியிட முடியும் என்று தெரிவித்தனர்.
FILE

அவர்கள் சொன்ன இன்னொரு விஷயம்தான் மொத்த இன்டஸ்ட்ரியையும் ஷாக் ஆக்கியிருக்கிறது.

தலைவா படத்தை தமிழகத்தில் 500 திரையரங்குகளில் வெளியிடுவதாக இருந்தனர். தொடர் பிரச்சனைகள் காரணமாக இப்போது திரையரங்குகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
webdunia
FILE

நேற்று பேசிய திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், 23 ஆம் தேதி விமலின் தேசிங்கு ராஜா 350 திரையரங்குகளில் வெளியாகிறது.

அதனால் விஜய் படத்துக்கு 500 திரையரங்குகள் ஒதுக்க முடியாது. அதிகபட்சம் 250 அல்லது 300 திரையரங்குகளில் வேண்டுமானால் வெளியிடலாம் என்று கூறினர்.

அதாவது விமல் படத்தைவிட குறைவான திரையரங்குகளில்தான் விஜய் படத்தை திரையிட முடியுமாம்.

யானை இளைத்தால் எறும்பும் ஏறி விளையாடும்ங்கிறது சினிமாவிலும் நிஜம்தான் போலிருக்கிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil