Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடுமுறையில் மட்டுமே நடிப்பு - சாதனா

விடுமுறையில் மட்டுமே நடிப்பு - சாதனா
, சனி, 10 மே 2014 (16:12 IST)
இயக்குனர் ராம் இயக்கி நடித்த, தங்க மீன்கள் பல தேசிய விருதுகளை பெற்றுத் தந்திருக்கிறது. அதில், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை பெற்றிருக்கிறார் தங்கம்மாவாக நடித்த சாதனா. 
தங்க மீன்கள் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ராம் அங்கிள் இந்தப் படத்தில் நடித்ததற்காக உனக்கு கண்டிப்பாக விருது கிடைக்கும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அதைப் போலவே எனக்கு தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. 
 
அந்தப் படம் இரண்டு ஆண்டுகள் தாமதமாக ரிலீஸானாலும், இவ்வளவு பெரிய புகழை சம்பாதித்து கொடுத்திருக்கிறது. இந்த விருதுகுப் பின்னால், நிறைய இயக்குனர்கள்.. தயாரிப்பாளர்கள் என்னை நடிக்க கேட்கிறார்கள். 
 
ஆனால், இப்போது படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க இருக்கிறேன். நல்ல கதை என்றாலும் படிப்பை விட்டுவிட்டு வந்து நடிக்க மாட்டேன். தற்போது துபாயில் படித்துக் கொண்டிருப்பதால் விடுமுறை காலங்களில் மட்டுமே நடிக்க வருவேன் என்கிறார் இந்த தங்க மீன் சாதனா.  

Share this Story:

Follow Webdunia tamil