Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய், விஷாலுக்கு போட்டியாக வரும் விக்ரமின் ஐ

விஜய், விஷாலுக்கு போட்டியாக வரும் விக்ரமின் ஐ
, வெள்ளி, 25 ஜூலை 2014 (18:25 IST)
ஐ எப்போது முடியும், எப்போது வெளியாகும் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை. ஆனால் வதந்திகளுக்கோ குறைவில்லை. சமீபத்திய வதந்தி, ஐ தீபாவளிக்கு வெளியாகிறது.
 
ஷங்கரின் பிரமாண்ட படைப்பான ஐ-யின் டாக்கி போர்ஷன் ஏற்கனவே முடிந்து விக்ரம் விஜய் மில்டனின் 10 எண்றதுக்குள்ள படத்தில் நடிக்க‌ப் போய்விட்டார். தற்போது படத்தின் ஸீஜி வேலைகள் நடந்து வருகின்றன. எடிட்டிங், பின்னணி இசை சேர்ப்பு எல்லாம் முடிய இன்னும் பல வாரங்கள் எடுக்கும் என தெரிகிறது. 
இந்நிலையில் தீபாவளிக்குப் படத்தை வெளியிட ஷங்கரும், தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனும் திட்டமிட்டிருப்பதாக தகவல். ஐ போன்ற பிரமாண்ட படத்தை தீபாவளி போன்ற திருவிழாவின் போது வெளியிட்டால் வழக்கமாக கிடைக்கும் ஓபனிங்கைவிட பிரமாண்ட ஓபனிங்கை பெற முடியும். அதனால் அவர்கள் தீபாவளியை குறி வைப்பதில் நியாயம் உள்ளது. பட வேலைகளும் தீபாவளிக்கு முன் முடிந்துவிடும். ஆக, ஐ தீபாவளிக்கு வெளியாகும் என்ற இன்றைய வதந்தி நாளைய செய்தியாவதற்கான வாய்ப்பு உள்ளது. 
 

தீபாவளிக்கு விஷால், ஸ்ருதி நடிப்பில் ஹரி இயக்கும் பூஜை படம் வெளியாவதாக பூஜைக்கு பூஜை போட்ட போதே அறிவித்திருந்தனர். அதேபோல் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் கத்தியும் தீபாவளிக்கு வெளியாகிறது. 
webdunia
தீபாவளிக்கு ஐ வெளியாவதாக இருந்தால் இந்த இரண்டு படங்களில் ஒன்று கண்டிப்பாக வெளியேறியே ஆக வேண்டும். திரையரங்குகள் மூன்று படங்களுக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil