Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் சதுரங்க வேட்டை ஹீரோ

விஜய் படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் சதுரங்க வேட்டை ஹீரோ
, வியாழன், 24 ஜூலை 2014 (17:32 IST)
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் நட்டு என்கிற நட்ராஜ்.
 
நட்ராஜ் பிரபல ஒளிப்பதிவாளர். தமிழைவிட இந்திப் படங்களுக்குதான் அதிகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆனந்த் எல் ராயின் இயக்கத்தில் தனுஷ் நடித்த ரான்ஜனா படத்துக்கும் இவர்தான் ஒளிப்பதிவு. நடிப்பு ஆசை ஏற்படும் போது தமிழ்ப் படங்களில் நடிப்பார். நாளை, சக்கரவியூகம், மிளகா ஆகியவை இவர் நடிப்பில் உருவானவை. என்றாலும் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சதுரங்க வேட்டை படம்தான் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.
 
இதையடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடப்படாதப் படத்தில் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விஜய்யின் பிஆர்ஓ பி.டி.செல்வகுமார் தயாரிக்கும் இந்த ஃபேண்டஸி படத்தில் விஜய்யுடன் ஸ்ருதி நடிக்க உள்ளார். இன்னொரு ஹீரோயின் ஹன்சிகா என்கின்றன செய்திகள். சுதீப் வில்லன். ஸ்ரீதேவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
 
இந்தியில் வாய்ப்புகள் வந்த போதும் விஜய் படம் என்பதால் ஒளிப்பதிவு செய்ய நட்ராஜ் ஒப்புக் கொண்டுள்ளார். இதற்கு முன் விஜய்யின் யூத் படத்துக்கு இவர் ஒளிப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil