Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் படத்தில் சுதீப், ஸ்ரீதேவி

Webdunia
புதன், 23 ஏப்ரல் 2014 (17:44 IST)
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கயிருக்கும் புதிய படத்தில் சுதீப், ஸ்ரீதேவி நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
நான் ஈ படத்துக்குப் பிறகு நல்ல வேடங்களாக தேடிக் கொண்டிருந்தார் சுதீப். கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன கதை பிடித்ததால் அவரது இயக்கத்தில் நடிக்க கால்ஷீட் தந்தார். படப்பிடிப்புக்கு கிளம்பும் நேரம் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு கே.எஸ்.ரவிக்குமாருக்கு கிடைத்தது. ரஜினியின் உடல்நிலையை மனதில் வைத்து, ரஜினி படத்தை முதலில் முடிக்கிறேன் என்று ரவிக்குமார் சொன்னதை சுதீப்பும் ஏற்றுக் கொண்டார்.
 
இந்நிலையில் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன் விஜய் படத்தில் நடிக்க சுதீப்பை சந்தித்தார் சிம்புதேவன். வேறு படங்களில் பிஸியாக இருப்பதால் முதலில் வாய்ப்பை ஏற்கவில்லை சுதீப். ஆனால் இத்தனை நா‌ட்களுக்குப் பிறகும் சுதீப்புக்குப் பதில் வேறொரு நடிகரை சிம்புதேவன் தேடிப் போகவில்லை. தவிர சுதீப்புக்கு சிம்புதேவன் உருவாக்கியிருந்த கதாபாத்திரம் வில்லன் கிடையாது. 
 
இந்த காரணங்களுடன் சிம்புதேவன் சொன்னது வித்தியாசமான ஃபேண்டஸி கதை என்பதால் தற்போது விஜய் படத்தில் நடிக்க சுதீப் ஒத்துக் கொண்டுள்ளார். அவர் இதுவரை வாங்காத மிகப்பெரிய சம்பளம் இந்தப் படத்துக்காக அவருக்கு தரப்பட உள்ளது.
 
சுதீப்பை போல் ஸ்ரீதேவியும் படத்தின் கதையில் கவரப்பட்டு நடிக்க ஒப்புக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

Show comments