Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் சேதுபதியை இயக்கும் கிருத்திகா...? ப்ளீஸ் வதந்தியை நம்பாதீங்க

விஜய் சேதுபதியை இயக்கும் கிருத்திகா...? ப்ளீஸ் வதந்தியை நம்பாதீங்க
, வெள்ளி, 6 ஜூன் 2014 (17:52 IST)
வணக்கம் சென்னை படத்தை எடுத்த கிருத்திகா உதயநிதி தனது அடுத்த ஸ்கிரிப்டை உருவாக்குவதில் தீவிரமாக உள்ளார். அவர் இயக்கும் படத்தை தனுஷின் வொண்டர்பார் தயாரிக்கிறது, விஜய் சேதுபதி நடிக்கிறார் என தகவல்.
 
தனுஷ் தயாரிப்பில் கிருத்திகா படம் இயக்க வாய்ப்புள்ளதாக கிருத்திகாவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது. அவரின் அடுத்தப் படமே தனுஷின் தயாரிப்பாக இருக்கலாம். ஆனால் ஹீரோ விஜய் சேதுபதி என்ற தகவல்?
 
நிச்சயமாக அது வதந்தி மட்டுமே. மெல்லிசை, வன்மம், இடம் பொருள் ஏவல், புறம்போக்கு, வசந்தகுமாரன் என்று அரை டஜன் படங்கள் வைத்திருக்கும் விஜய் சேதுபதி குறித்து தினம் பல செய்திகள் வருகின்றன. அதில் ஒன்றுதான் கிருத்திகா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பதும். ஆனால் அது உண்மையில்லை என்று விஜய் சேதுபதியே விளக்கமளித்துள்ளார்.
 
வளர்ந்து வருகிற நேரத்தில் தெரிந்தே கரியரை காலி பண்ணுவாரா என்ன.

Share this Story:

Follow Webdunia tamil