Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம் வெள்ளைக்கார துரை

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம் வெள்ளைக்கார துரை
, செவ்வாய், 17 ஜூன் 2014 (12:56 IST)
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் அரிமா நம்பி, கௌரவ் இயக்கத்தில் சிகரம் தொடு, மலையாள உஸ்தாத் ஹோட்டலின் ரீமேக் தலப்பாகட்டி என மூன்று படங்களில் நடித்து வருகிறார் விக்ரம் பிரபு. இதில் அரிமா நம்பி விரைவில் திரைக்கு வருகிறது.
 
இந்நிலையில் வெள்ளைக்கார துரை என்ற புதிய படத்தில் அவர் கமிட்டாகியிருக்கிறார். படத்தை இயக்குவது துள்ளுவதோ இளமை எழில்.
 
துள்ளுவதோ இளமை போன்ற ஹிட் படங்களைத் தந்த எழில் அடுத்தடுத்தப் படங்களில் சறுக்கி ஒருகட்டத்தில் தமிழ் சினிமாவிலிருந்தே காணாமல் ஆனார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கிய மனம் கொத்திப்பறவை அவருக்கு சின்ன பிரேக்காக அமைந்தது. அதையடுத்து இயக்கிய தேசிங்குராஜாவும் சுமார் வெற்றி.
 
தற்போது வெள்ளைக்கார துரை என்ற படத்தை இயக்கவுள்ளார். படத்தின் பெயர் ஏதோ ‌பீ‌ரியட் படம் போல தோன்றினாலும் இது கிராமத்துப் பின்னணியில் தயாராகும் படம்தான். கிராமங்களில் வெள்ளையாக இருப்பவர்களை வெள்ளைக்கார துரை என்பார்கள். அதைதான் படத்தின் பெயராக்கியுள்ளார்.
 
வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஸ்ரீதிவ்யா ஹீரோயின். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil