Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாலு படம், வளைந்து கொடுத்த ஹன்சிகா

Webdunia
செவ்வாய், 29 ஏப்ரல் 2014 (12:26 IST)
வாலு படத்தின் பாடல் காட்சிகளை எடுக்க ஹன்சிகா கால்ஷீட் தரவில்லை என்று படத்தின் தயாரிப்பாளர் சக்ரவர்த்தி புகார் செய்ததும், வாலு படத்துக்காக ஹன்சிகா தந்த கால்ஷீட்களை வீணடித்துவிட்டனர். உடனே கால்ஷீட் வேண்டுமென்றால் அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களின் தயாரிப்பாளர்களிடம்தான் சக்ரவர்த்தி பேச வேண்டும் என்று ஹன்சிகா தரப்பில் பதிலளிக்கப்பட்டதும் நினைவிருக்கலாம்.

 
இந்த பஞ்சாயத்து நல்ல முடிவை எட்டியுள்ளது. தற்போது வாலு படத்தின் பாடல் காட்சியொன்று பெங்களூருவில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தில் நடிக்கும் போதுதான் சிம்புவும், ஹன்சிகாவும் காதலிக்க ஆரம்பித்தனர். இந்த பாஸ்ட்ஃபுட் காதல் படம் முடிவதற்குள் முடிவுக்கும் வந்தது. காதல் முறிவைத் தொடர்ந்து பாடல்காட்சிகளில் நடிக்க ஆர்வம் காட்டாமலிருந்தார் ஹன்சிகா. முக்கியமாக வெளிநாட்டில் பாடல் காட்சி எடுக்க ஹன்சிகா எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் பெங்களூருவில் எடுக்கப்பட்டு வரும் பாடல் காட்சியில் சிம்புவுடன் ஹன்சிகாவும் நடித்து வருகிறார். மீதி இரு பாடல்களை வெளிநாடுகளில் எடுக்க முடிவு செய்துள்ளனர். மே 12 முதல் அவ்விரு பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
 
இதனால் வாலு ஜுலை மாதத்தில் வெளியாவதற்கான வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments