Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வல்லவனின் சீக்ரெட் வெப்பன் பவர் ஸ்டாராமே...?

வல்லவனின் சீக்ரெட் வெப்பன் பவர் ஸ்டாராமே...?
, ஞாயிறு, 27 ஏப்ரல் 2014 (15:47 IST)
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்த சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் தனி ஹீரோவாக மாறியுள்ளார். இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழாவில் அவர் கூறியது நினைவிருக்கலாம்.
கண்ணா லட்டு தின்ன ஆசையாவில் படாவதி ஸ்டார் சீனிவாசனை வைத்து காமெடி செய்த சந்தானம் இந்தப் படத்தில் சோலார் ஸ்டார் ராஜகுமாரனை நகைச்சுவைக்கு பயன்படுத்தியுள்ளார். சீனிவாசன் சிறைப்பறவையானதால் அவருக்குப் பதில் ராஜகுமாரனை சந்தானம் நடிக்க வைத்தார்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சீனிவாசன் நடிக்கவில்லை என்றே அனைவரும் நினைத்திருந்தனர். படத்தின் ட்ரெய்லரிலும் சீனிவாசன் இல்லை. ஆனால் படத்தில் சீனிவாசன் நடித்திருக்கிறாராம். கடைசிநேர விளம்பரத்துக்காக அவர் நடித்ததை சந்தானமும், படக்குழுவினரும் இதுவரை வெளிப்படுத்தாமல் இருக்கிறார்கள் என ஸ்டுடியோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
webdunia
பாடல்கள் வெளியீட்டுவிழாவில் பேசிய சந்தானம், என்னை மட்டும் நம்புங்க என்று தயாரிப்பாளர்களிடம் கூறியதாக சந்தானம் கூறினார். தன்மீது அவ்வளவு நம்பிக்கை உள்ளவர் சீக்ரெட் வெப்பனாக சீனிவாசனை வைத்திருப்பார்...? ஐரணிதான்.
 
எதற்கும் படம் வரும்வரை காத்திருப்போம்.

Share this Story:

Follow Webdunia tamil