Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயிறு சரியில்லை - அஞ்சான் விழாவில் ஆப்சென்டான சமந்தா

Webdunia
புதன், 23 ஜூலை 2014 (10:41 IST)
அஞ்சான் படத்தின் பாடல்களை பிரமாண்டமாக சென்னை ட்ரேட் சென்டரில் வெளியிடுவதாக இருந்தனர். ட்ரேட் சென்டரில் ஆள்களை கூட்டினால் போக்குவரத்து ஸ்தம்பிக்கும், பாதுகாப்பும் இல்லை என்று போலீஸ் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சத்யம் திரையரங்கில் அஞ்சான் ஆடியோ விழா நடந்தது.
படத்தின் ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள் என்று அனைவரும் விழாவில் கலந்து கொண்டனர். படத்தின் ஹீரோயின் சமந்தா மட்டும் வரவில்லை.
 
தாங்கள் நடித்த படங்களின் விளம்பர நிகழ்ச்சிகள், பாடல்கள் வெளியீட்டு விழா உள்பட எதற்கும் வருவதில்லை என்பதை சில நடிகைகள் கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள். வேறு சிலரோ விழாவுக்கு அழைத்தால் தனக்கும் தனது குடும்பத்துக்கும், வீட்டு வேலைக்காரர்களுக்கும் பிசினஸ் கிளாஸ் பிளைட் டிக்கெட், நட்சத்திர ஹோட்டலில் அறை, வந்து போனதற்கு கைச்செலவாக சில லட்சங்கள் என்று படத்தின் பாதி பட்ஜெட்டை கேட்கிறார்கள். இந்த பூனைகளுக்கு மணி கட்ட இங்கு யாருக்கும் தைரியமில்லை.
அனாமிகா படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொள்ளவில்லை என தெலுங்கில் நடிக்க நயன்தாராவுக்கு தடை விதித்தனர். இப்படியொரு ஹாட் டாபிக் சினிமா விழாவை முன்னிட்டு ஓடிக்கொண்டிருக்கையில் சமந்தா சொல்லி வைத்த மாதிரி இன்றைய விழாவுக்கு ஆப்சென்ட்.
 
ஏன் என்ற கேள்விக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பிளைட் லேட், லக்கேஜ் காணவில்லை, ஃபுட் பாய்சன் என்று காரணங்கள் சொல்லியிருக்கிறார். ஒரே நாளில் மூன்று பிரச்சனைகள். 
 
நம்புற மாதிரி இல்லையே.
 

பேச்சிலர் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்!

அதிதி ராவ் ஹைதாரியின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

வடக்கன் படத்துக்கு வந்த புதிய சிக்கல்… எதிர்பார்த்தது போல அடுத்த வாரம் ரிலீஸ் ஆகுமா?

கௌதம் மேனன் இயக்கத்தில் நயன்தாரா… சூப்பர் ஸ்டாரோடு மீண்டும் கூட்டணி!

முன்பகையை மறந்து ஒரே மேடையில் கமல்ஹாசன் & தாணு!

Show comments