Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வடிவேலுவை இயக்கும் பிரபுதேவா...?

வடிவேலுவை இயக்கும் பிரபுதேவா...?
, சனி, 5 ஏப்ரல் 2014 (11:06 IST)
கேட்டை திறந்தால் போதும். குடுகுடுவென்று உள்ளே நுழைய நிறைய பேர் காத்திருக்கிறார்கள். அந்த கேட்.... தெனாலிராமன்.
வடிவேலுக்கான மார்க்கெட் அப்படியேதான் உள்ளது. அதிகார மையத்துக்கு பயந்தே இதுவரை படங்களில் அவரை கமிட் செய்யாமல் இருந்தனர். இரண்டு வருட வனவாசத்துக்குப் பின் தெனாலிராமன் படத்தில் நடித்தார். எதிர்ப்புக்கும் எதிர்பார்ப்புக்கும் இடையே வருகிற 18 ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. 
 
படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து வடிவேலுவை ஹீரோவாக வைத்தே படம் எடுக்க பலர் தயார். அதில் ஒருவர் பிரபுதேவா என்கின்றன தகவல்கள்.
 
ஆக்ஷன் ஜாக்ஸன் படத்தை இந்தியில் இயக்கி வரும் பிரபுதேவா அடுத்தடுத்து சைப் அலிகான், அக்ஷய் குமார் நடிக்கும் படங்களை இயக்குகிறார். என்னுடைய கவனம் முழுக்க இந்திதான், தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியாது என சமீபத்தில் அவர் கூறியது நினைவிருக்கலாம்.
 
அதேநேரம் தமிழில் வடிவேலுவை வைத்து அவர் படம் பண்ண இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. வடிவேலு, பிரபுதேவா இருவரும் நெருங்கி பழகியவர்கள். பிரபுதேவா நடித்த பல படங்களில் வடிவேலுதான் காமெடியன். அவரை வைத்து படம் இயக்கும் ஆவல் பிரபுதேவாவுக்கு உள்ளதாம்.
 
அரசியலைப் போலவே சினிமாவிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil