Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லூசியா தமிழ் ரீமேக்கில் சித்தார்த்

லூசியா தமிழ் ரீமேக்கில் சித்தார்த்
, செவ்வாய், 3 டிசம்பர் 2013 (17:37 IST)
கன்னடப் படங்கள் கர்நாடக எல்லையைத் தாண்டி ரசிக்கப்படுவது அபூர்வம். நாம் சொல்வது கமர்ஷியல் படங்களை. அந்த கருத்தை உடைத்த படம் லூசியா. பவன் குமார் என்பவர் இயக்க்கிய லூசியா ஒரு நான் லீனியர் படம். படத்தைப் பார்த்தவர்கள் கொண்டாடுகிறார்கள்.
FILE

லூசியா பற்றிய செய்தி தெரிந்ததுமே பவன் குமாரிடம் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கினார் அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும் என்று வெரைட்டியான நல்ல படங்களை தயாரித்துவரும் சி.வி.குமார்.

webdunia
FILE
தயாரிப்பாளர் கிடைக்காமல் இணையத்தில் மக்களிடமிருந்து பணம் திரட்டி இந்தப் படத்தை பவன் குமார் எடுத்தார். த்ரில்லரான இந்தப் படத்தை சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் தமிழில் ரீமேக் செய்கிறது. வழக்கம் போல பிரசாத் ராமர் என்ற புதுமுகத்திடம் படத்தை இயக்கும் பொறுப்பை தந்திருக்கிறார் சி.வி.குமார். சந்தோஷ் நாராயணன் இசை.

சித்தார்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முக்கிய என்று சொல்ல காரணம், மூன்று வெவ்வேறு கதைகளை கொண்ட படம் இது. ஜனவரியில் தமிழ் லூசியாவின் - ஆமாம், படத்தின் பெயரை அப்படியே பயன்படுத்துகிறார்கள் - படப்பிடிப்பு தொடங்குகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil