Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லீ விட்டேகரின் லிங்கா கிளைமாக்ஸ்

லீ விட்டேகரின் லிங்கா கிளைமாக்ஸ்
, திங்கள், 22 செப்டம்பர் 2014 (16:57 IST)
கே.எஸ்.ரவிக்குமாரின் லிங்காவில் சண்டைக் காட்சிகளை அமைக்கும் பொறுப்பை லீ விட்டேகர் ஏற்றுக் கொண்டிருந்தார். தற்போது லிங்காவின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி முடிவடைந்துவிடும் என லீ ட்விட்டரில் கூறியுள்ளார்.
லீ விட்டேகர் உலகம் முழுவதும் அறியப்படும் பெயர். ஹாலிவுட்டில் ஸ்டண்ட் நடிகராகவும், ஸ்டண்ட் டைரக்டராகவும், செகண்ட் யூனிட் டைரக்டராகவும் பல்வேறு முகங்கள் இவருக்கு உண்டு. டை ஹார்ட், பாஸ்ட் அண்ட் பியூரிஸ் போன்ற புகழ்பெற்ற சீரிஸ்களில் பங்களிப்பு செலுத்தியுள்ளார். ஜாக்கிசானின், த ஸ்பை நெக்ஸ்ட் டோர் படத்திலும் இவரது பங்கு உண்டு.
 
ஒருபுறம் சண்டைக் கலைஞர் என்றால் இன்னொருபுறம், சிறந்த இசையமைப்பாளர். இவர் இதுவரை இரண்டு இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். சிட்டி ஆஃப் ஏஞ்சல்ஸ் என்ற குறும் படத்தையும் இயக்கியுள்ளார்.
 
லீ -ஐ இந்தியாவுக்கு அழைத்து வந்தவர் கமல். அவரது விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 இரண்டிலும் இவர்தான் ஸ்டண்ட் டைரக்டர். அதன் பிறகு விஷ்ணுவர்தனின் ஆரம்பம். தற்போது லிங்கா.
 
லிங்கா படத்தின் கிளைமாக்ஸ் இதுவரை இல்லாத அளவுக்கு, பிரமாண்டமாகவும், பிரமாதமாகவும் உருவாகி வருவதாக லீ கூறியுள்ளார்.
 
டிசம்பர் 12 ரஜினியின் பிறந்தநாளில் லிங்கா திரைக்கு வருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil