Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லிங்காவில் ரஜினி ஜோ‌டியாக நடிக்கும் பிரிட்டன் நடிகை

லிங்காவில் ரஜினி ஜோ‌டியாக நடிக்கும் பிரிட்டன் நடிகை
, புதன், 28 மே 2014 (13:59 IST)
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி ஜோ‌டியாக பிரிட்டனைச் சேர்ந்த நடிகை லாரன் ஜே இர்வின் நடித்துள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மைசூ‌ரில் படமாக்கப்பட்டன.
 
லிங்காவின் கதை சுதந்திரத்துக்கு முன்பும், நிகழ்காலத்திலுமாக இரு காலகட்டங்களில் நடப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் வரும் ரஜினியின் ஜோ‌டியாக நடிப்பவர் சோனாக்ஷி சின்கா. தற்போது பிரிட்டன் நடிகை லாரன் ஜே இர்வினையும் ரஜினி ஜோ‌டியாக நடிக்க வைத்துள்ளனர். 
 
இவர்கள் தவிர நிகழ்காலத்தில் நடக்கும் கதையில் ரஜினிக்கு ஜோ‌டியாக அனுஷ்கா நடிக்கிறார். ரஜினியின் வில்லனாக நடிப்பவர் ஜெகபதிபாபு.
 
ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். கோச்சடையான் போன்று மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் ஏதுமின்றி நிஜ ரஜினியை லிங்காவில் ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil