Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லிங்காவில் சாபுசிரில்

லிங்காவில் சாபுசிரில்
, புதன், 7 மே 2014 (19:22 IST)
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தில் கலை இயக்குனராக சாபுசிரில் பணிபுரிகிறார்.
 
ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இப்படம் இரண்டு தலைமுறைகளின் உறவைச் சொல்லும் கதை. 1940 ஐ சேர்ந்த தலைமுறையாக சோனாக்ஷி சின்கா நடிக்கிறார். இந்த காலகட்டத்து கதாபாத்திரத்தில் அனுஷ்கா. ரஜினிக்கு இரு வேடங்கள். ரஹ்மான் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.
 
இந்திய சினிமாவின் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பணிபுரியும் இப்படத்தில் கலை இயக்குனராக சாபுசிரில் ஒப்பந்தமாகியுள்ளார். 
 
மைசூரில் இம்மாதம் 3ஆம் தேதி லிங்காவின் படப்பிடிப்பு தொடங்கியது. வரும் 25ஆம் தேதி வரை கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் படப்பிடிப்பை நடத்துகிறார்கள். 25ஆம் தேதிக்குப் பிறகு படத்தின் இரண்டாவது ஷெட்யூல் ஹைதராபாத்திலுள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடக்க உள்ளது.
 
லிங்காவில் ரஜினியின் வில்லனாக ஜெகபதிபாபு நடிக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil