Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாபத்துடன் கைமாறிய வேலையில்லா பட்டதாரி

Webdunia
வெள்ளி, 4 ஜூலை 2014 (11:31 IST)
தனுஷின் வுண்டர்பார் தயாரித்திருக்கும் வேலையில்லா பட்டதாரியின் அனைத்து ஏரியாக்களும் நல்ல விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.
வேலையில்லா பட்டதாரியை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசை. தனுஷும் அமலா பாலும் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு பைனான்ஸ் செய்ய ஒருவரும் முன்வரவில்லை என்றும் தனுஷ் தயாரிப்பில் சிவ கார்த்திகேயன் நடிக்கும் டாணா படத்துக்கு எத்தனை கோடி தரவும் பைனான்சியர்கள் தயாராக இருந்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது. வேலையில்லா பட்டதாரியை வாங்க ஆளிருக்குமா என்றளவுக்கு இந்த கிசுகிசுவின் வீச்சு இருந்தது.
 
எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வேலையில்லா பட்டதாரியின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை வாங்கியிருந்தார். படம் வெளியாக இன்னும் 15 தினங்கள் இருக்கையில் தமிழகத்தின் அனைத்து ஏரியாக்களும் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளது. 
 
மதுரை, திருச்சி, கோவை, சேலம், வட, தென் ஆற்காடு, செங்கல்பட்டு மற்றும் சென்னை பகுதிகளின் விநியோக உரிமையை பெற கடும் போட்டியும் நிலவியது.
 
வரும் ஜுலை 18 -ம் தேதி தனுஷின் 25 -வது படமான வேலையில்லா பட்டதாரி 400 திரையரங்குகளில் வெளியாகிறது.
 

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

Show comments