Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரிஸ்க் வேண்டாம் - இளம் நடிகருக்கு ரஜினி அட்வைஸ்

ரிஸ்க் வேண்டாம் - இளம் நடிகருக்கு ரஜினி அட்வைஸ்
, செவ்வாய், 26 ஆகஸ்ட் 2014 (12:09 IST)
சிவாஜி குடும்பத்தின் மீது கமல், ரஜினிக்கு இருக்கும் மரியாதை அனைவரும் அறிந்ததே. பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நடிக்கும் படங்களைப் பார்த்து தவறாமல் கருத்து சொல்கிறவர் ரஜினி. அவர், ரிஸ்க் எடுக்க வேண்டாம் என விக்ரம் பிரபுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி படங்களில் நடித்த விக்ரம் பிரபுவின் சிகரம் தொடு விரைவில் வெளிவர உள்ளது. இந்த நான்கும் ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள். சண்டைக் காட்சிகளில் அனுபவம் அதிகம் இல்லையென்றாலும் விக்ரம் பிரபு டூப் வைத்துக் கொள்வதில்லை. எவ்வளவு ரிஸ்க்கான காட்சியாக இருந்தாலும் அவரேதான் நடிப்பார்.
 
இதனை கேள்விப்பட்ட ரஜினி, ரிஸ்க் வேண்டாம் என்று விக்ரம் பிரபுவை அறிவுறுத்தியுள்ளார். விக்ரம் பிரபுவை மட்டுமின்றி இளம் நடிகர்கள் அனைவரிடமும் ரஜினி சொல்லும் முக்கியமான விஷயம், ரிஸ்க் வேண்டாம் என்பதுதான். 
 
பில்லா படத்தின் கண்ணாடியை நானே உடைப்பேன் என்று டூப் போடாமல் நடித்து, கண்ணாடிகள் உடம்பு முழுவதும் காயம் ஏற்படுத்த, மூன்று மாதங்களுக்கு மேல் சிகிச்சை எடுக்க வேண்டி வந்தது ரஜினிக்கு. தனக்கு நேர்ந்த அந்த விபத்து மற்றவர்களுக்கு நடக்கக் கூடாது என்பதற்காகவே அவர் ரிஸ்க் வேண்டாம் என்று இளம் நடிகர்களை அறிவுறுத்துகிறார்.
 

Share this Story:

Follow Webdunia tamil