ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும்… இயக்குனர் அட்லி ஆசை!

vinoth
சனி, 11 அக்டோபர் 2025 (13:59 IST)
சுமார் 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கன்னட மொழியில் உருவானா ‘காந்தாரா’ திரைப்படம் இந்திய அளவில் பேன் இந்தியா ஹிட் ஆகி 400 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்குகள் மூலமாக மட்டுமே வசூலித்தது. அதையடுத்து மூன்று ஆண்டுகள் கழித்து தற்போது அதன் இரண்டாம் பாகம் ‘காந்தாரா -1’ ரிலீஸாகியுள்ளது.

காந்தாரா கதைக்களம் நடக்கும் பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் இந்த பாகத்தில் சொல்லப்பட்டுள்ளது.  முதல் பாகத்தின் வெற்றி காரணமாக சுமார் 125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த பாகம் உருவாக்கப்பட்டு பேன் இந்தியா ரிலிஸாக நேற்று ரிலீஸானது. ரிலீஸுக்கு முன்பே இந்தியா முழுவதும் பல நகரங்களில் பிரீமியர் காட்சிகள் திரையிடப்பட்டன.படம் முதல் வாரத்தில் மட்டும் 500 கோடி ரூபாய் வசூல் செய்து அசத்தி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தைப் பார்த்த அட்லி “ இந்த படத்தை நான் அமெரிக்காவில் 2 மணிநேரம் பயணம் செய்து பார்த்தேன். படம் பார்த்ததும் ரிஷப் ஷெட்டிக்குப் போன் செய்து பாராட்டினேன். இந்த மாதிரி ஒரு படத்தைக் கொடுப்பது கடினம். இந்த படத்துக்காக ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருது கிடைக்கவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் படத்தில் எனக்கு இருந்த ஒரே வருத்தம்.. ரொம்ப நாளைக்கு பிறகு ஃபீல் பண்ணும் நடிகை

நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு பெண் குழந்தை.. குவியும் திரையுலகினர்களின் வாழ்த்து..!

அந்தக் கருமத்தை ஏன் பாக்குறீங்க? பிக்பாஸ் குறித்த கேள்விக்கு கடுப்பான மன்சூர்அலிகான்

பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி.. பிரபலங்கள் வாழ்த்து

பாபநாசம் புகழ் எஸ்தர் அணிலின் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments