Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரியாலிட்டி ஷோ நடுவரான ஆண்ட்ரியா

ரியாலிட்டி ஷோ நடுவரான ஆண்ட்ரியா
, செவ்வாய், 23 செப்டம்பர் 2014 (11:29 IST)
ஆண்ட்ரியா அடிப்படையில் ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். தமிழ் சினிமாவில் பாடுவதற்கு வந்த அவரை கௌதம் தனது பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடிகையாக்கினார். விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் என்று கமலின் ஆஸ்தான் நடிகையாகும் அளவுக்கு வளர்ந்துவிட்ட அவர், தரமணி படத்தில் நடிப்பதுடன் இசையும் அமைக்கிறார்.
இந்நிலையில் மலையாள தொலைக்காட்சி ஒன்றின் ரியாலிட்டி ஷோவில் நடுவராக பங்கேற்கவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
 
சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்துவது வடக்கே பிரபலம். ஆனால் தெற்கே அப்படியில்லை. ஒன்றிரண்டு விதிவிலக்கு தவிர்த்து மற்றவர்கள் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் சின்னத்திரை பக்கம் ஒதுங்கியவர்கள்.
 
இனி ஆண்ட்ரியாவையும் அந்த விதிவிலக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.
 

Share this Story:

Follow Webdunia tamil