Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராணியாக விரும்பும் ப்ரியா ஆனந்த்

ராணியாக விரும்பும் ப்ரியா ஆனந்த்
, வெள்ளி, 22 ஆகஸ்ட் 2014 (11:57 IST)
எதிர்நீச்சல் வெற்றிக்குப் பிறகு ப்ரியா ஆனந்தை தேடி நிறைய வாய்ப்புகள் வந்தன. விமல், விக்ரம் பிரபு, அதர்வா, கௌதம் கார்த்திக் என்று இளம் ஹீரோக்களுடன் நடித்தார். மேலும் பல வாய்ப்புகள் அவருக்காக காத்திருக்கின்றன.
இந்நிலையில் இந்தி குயின் படத்தின் ரீமேக்கில் கங்கனா ரனவத்தின் கதாபாத்திரத்தில் நடிக்கும் தனது ஆசையை அவர் வெளியிட்டார்.
 

கங்கனா நடித்த குயின் படம் அனைவரையும் கவர்ந்ததுடன் பாக்ஸ் ஆபிஸில் வெற்றியும் பெற்றது. அதனை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை தியாகராஜன் வாங்கினார். கங்கனாவின் வேடத்தை இந்த ரீமேக்கில் செய்யப் போகிறவர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
webdunia
குயின் ரீமேக் குறித்து பேசிய ப்ரியா ஆனந்த், குயின் எனக்குப் பிடித்த படம். அதன் ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன் என தனது விருப்பத்தை தெரியப்படுத்தினார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil