Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராணியாக சார்மி...?

ராணியாக சார்மி...?
, புதன், 23 ஜூலை 2014 (10:51 IST)
இந்தியில் வெற்றி பெற்ற குயின் படத்தின் நான்கு மொழி ரீமேக் உரிமையை தியாகராஜன் வாங்கியிருந்தார். அந்த ரீமேக்கில் யார் நடிப்பது என்று இன்னும் முடிவாகவில்லை. இந்நிலையில் சார்மியின் பெயர் அடிபடுகிறது.
குயின் படத்தில் கங்கனா ரனவத் நடித்திருந்தார். அப்படத்தை கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யும் உரிமையை தியாகராஜன் வாங்கினார். நயன்தாரா, த்ரிஷா போன்ற ஏதாவது முன்னணி நடிகைகள் கங்கனா ரனவத் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் என கூறப்பட்டது. எந்த நடிகை கங்கனாவின் கதாபாத்திரத்துக்கு தேர்வாகிறாரோ அவரை கங்கனா கிரீடம் அணிவித்து அறிமுகம் செய்வார் என்றும் தியாகராஜன் கூறியிருந்தார்.
webdunia
இந்நிலையில் குயின் படம் குறித்து கருத்து தெரிவித்த நடிகை சமந்தா, குயின் படத்தை தென்னிந்தியாவில் அப்படியே ரீமேக் செய்ய முடியாது. செய்தாலும் சரிவராது. தென்னிந்தியாவுக்கு ஏற்ப நிறைய மாறுதல்கள் செய்ய வேண்டும். அதனால் நான் குயின் ரீமேக்கில் நடிக்க மாட்டேன் என்று யாரும் கேட்காமலே படம் குறித்து எதிர்மறை கருத்தை தெரிவித்தார்.
 
யார் கங்கனாவின் கதாபாத்திரத்தை செய்யப் போகிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் சார்மி நடிப்பதற்கு வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இதனை சார்மியோ, தியாகராஜனோ இதுவரை மறுக்கவோ, ஆமோதிக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil