Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜசேகர் - ஜீவிதா தம்பதியின் மகளும் இப்போது ஹீரோயின்

Webdunia
ஞாயிறு, 4 மே 2014 (16:51 IST)
நடிகர் டாக்டர் ராஜசேகர் - முன்னாள் நடிகையும், தயாரிப்பாளரும், இயக்குனருமான ஜீவிதா தம்பதியின் மூத்த மகள் ஷிவானி தெலுங்குப் படத்தில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
தமிழில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவர் ஜீவிதா. இவர் பிறகு தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரை திருமணம் செய்து ஹைதராபாத்தில் செட்டிலானார். தொண்ணூறுகளின் சினிமா ரசிகர்களுக்கு ராஜசேகர் நன்கு அறிமுகமானவர். விஜயசாந்தியின் வைஜெயந்தி ஐபிஎஸ் ஸுக்குப் பிறகு தமிழில் அதிரடியாக ஓடிய தெலுங்கு டப்பிங் படமென்றால் அது ராஜசேகர் நடித்த, இதுதாண்டா போலீஸ் படம்தான். 
 

அதன் பிறகு டா போட்ட பெயர்களுடன் பல ராஜசேகரின் தெலுங்குப் படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டன. தற்போது தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வரும் இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள். ஷிவானி, ஷிவாத்மிகா.

மூத்த மகள் ஷிவானிக்கு தற்போது 17 வயதாகிறது. இவர் Vanda ki Vandha என்ற தெலுங்குப் படத்தில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
இது குறித்து பேட்டியளித்த ராஜசேகர், எங்கள் மகளை சினிமாவில் அறிமுகப்படுத்த சரியான கதையை எதிர்நோக்கியிருந்தோம். நாங்கள் எதிர்பார்த்தது போல் Vanda ki Vandha படம் அமைந்தது.

எங்கள் மகளை அறிமுகப்படுத்த இதைவிட சிறந்த படம் இருக்க முடியாது என்றார்.
 
படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.
 

நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் எங்கே? எப்போது?.. ஆச்சரிய தகவல்..!

’நாட்டை திருத்தனும்ன்னா ஒரே வழி மரண பயம்’: ‘இந்தியன்’ டிரைலர்..!

வீட்டுக்குள் புகுந்த திருடர்கள்.. பிடிக்க முயன்ற ஹாலிவுட் நடிகர் கொலை! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அப்பா, அம்மாவுடன் தளபதி விஜய் எடுத்த புகைப்படம்.. எஸ்.ஏ.சியின் க்யூட் பதிவு..!

எங்க ஊரு பொண்ணுமா நீ.. முப்பாத்தம்மன் கோவிலில் ஜான்வி கபூர் தரிசனம்!

Show comments