Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரமலான் வாரத்தில் வெளியாகும் விஜய் ஆண்டனியின் சலீம்

ரமலான் வாரத்தில் வெளியாகும் விஜய் ஆண்டனியின் சலீம்
, வியாழன், 3 ஜூலை 2014 (15:03 IST)
விஜய் ஆண்டனி நடித்திருக்கும் த்ரில்லர் படமான சலீம் ரமலானை முன்னிட்டு ஜுலை 25 -ம் தேதி வெளியாகிறது.
நான் படத்தின் மூலம் ஹீரோவான விஜய் ஆண்டனி இனி நடிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கயிருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். நடிப்புப் போக நேரமிருந்தால் மட்டுமே இசையமைக்கவிருப்பதாகவும் முடிவு செய்துள்ளார். அவரது இரண்டாவது படம், சலீம். நான் படத்தில் விஜய் ஆண்டனியின் கதாபாத்திர பெயர் சலீம். அதையே தனது இரண்டாவது படத்தின் பெயராக்கியுள்ளார். பாரதிராஜாவின் அசிஸ்டெண்ட் நிர்மல் குமார் சலீமை இயக்கியுள்ளார்.
 
ரமலானை முன்னிட்டு ஜுலை 25 படத்தை வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதே தினத்தில்தான் இரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் மெட்ராஸ் படம் வெளியாகிறது.
 
சலீமை ஸ்டுடியோ 9, ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் மூன்றும் இணைந்து தயாரித்துள்ளன.
 

Share this Story:

Follow Webdunia tamil