ஐசியூவில் இருந்து தனி வார்டுக்கு ரஜினிகாந்த் மாற்றம்: இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ்!

Siva
வியாழன், 3 அக்டோபர் 2024 (08:03 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தற்போது, அவர் ஐசியூ பிரிவிலிருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்டதாகவும், இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ரத்த நாளத்தில் வீக்கம் இருந்ததால் அறுவை சிகிச்சை இல்லாமல் சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

மேலும், ரஜினிகாந்திற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சொக்கலிங்கம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில், ரஜினிகாந்த் பூரண நலம் பெறுகிறார் என்றும், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறியிருந்தார். ஆனால், அதே நேரத்தில், மூன்று வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தற்போது கிடைத்த தகவலின் படி, ஐசியூ பிரிவில் இருந்து ரஜினிகாந்த் தனி வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அவர் இயல்பு நிலையில் திரும்பி இருப்பதாகவும், 24 மணி நேர மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு, இன்று அல்லது நாளை வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது, அவர் தனது வழக்கமான செயல்களை தானே மேற்கொள்வதாகவும், வீடு திரும்புவதற்கு முழு உடல் நலத்துடன் தயாராக உள்ளார் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கார் பந்தயத்திற்கு தயாரான அஜித் அணி.. அதிரடி அறிவிப்பு..!

விஜய், அஜித் பற்றிய கேள்விக்கு சினேகா கொடுத்த பதில்.. பிரசன்னாவின் ரியாக்‌ஷன்

‘ஜனநாயகன்’னு பேர் வச்சு கடைசில இததான் சொல்ல வர்றாங்களா? சம்பந்தமே இல்லையே

‘வா வாத்தியார்’ படத்திற்கு மீண்டும் சிக்கல்.. மீண்டும் ரிலீஸ் ஒத்திவைப்பா?

பூஜை போட்ட ஒருசில நாட்களில் சூர்யா படத்தை வாங்கிய ஓடிடி நிறுவனம்.. எத்தனை கோடி?

அடுத்த கட்டுரையில்
Show comments