Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரகுவரனை வணங்குகிறேன்

Webdunia
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2014 (12:18 IST)
சிலருக்கு இஷ்ட தெய்வம் பிள்ளையார், சிலருக்கு ஏசு, பலருக்கு இறை தூதர் நபி... ஆனால் வில்லன் நடிகர் ஹரிஷ் உத்தமன் வணங்குவது மறைந்த நடிகர் ரகுவரனை.
ரகுவரனுக்கு இன்றும் ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். மலையாள இயக்குனர் ஆஷிக் அபு ரகுவரனின் ரசிகர். அவரை தனது இடுக்கி கோல்ட் படத்தில் பயன்படுத்த நினைத்தார். ரகுவரன் இறந்துவிட்டதால் அது முடியவில்லை. அதேநேரம் ரகுவரனின் போட்டோவுக்கு மாலை போட்டு இடுக்கி கோல்ட் படத்தில் வரும் ரவிச்சந்திரனின் கதாபாத்திரம் வணங்குவது போல் ஒரு காட்சியை வைத்தார்.
நிற்க. அந்தளவுக்கு இல்லையென்றாலும் ரகுவரன்தான் புதிய வில்லன் நடிகர் ஹரிஷ் உத்தமனின் ஆதர்ஷம். பாண்டிய நாடு படத்தில் அறிமுகமான இவர் மிஷ்கினின் பிசாசு, விஷ்ணுவர்தனின் யட்சன், மகிழ்திருமேனியின் மீகாமன் என்று முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார். நடிக்க வரும் போதும், அதற்கு முன்பும் இவரது ஒரே ஆசை ரகுவரனைப் போல பெயர் வாங்க வேண்டும். முதல் படத்தில் கிடைத்த பாராட்டு தெம்பளித்ததாக உத்தமன் பூரிக்கிறார்.
 
விரைவில் உங்க ஆசை நிறைவேற வாழ்த்துகள்.
 

நடிகர் பிரபாஸ்-க்கு திருமணமா? இன்ஸ்டாகிராம் ஸ்டோரியால் பரபரப்பு..!

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

Show comments