Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மை டியர் டெஸ்பரடோ ரீமேக் - சூர்யாவுக்கு பதில் விஜய் சேதுபதி

Webdunia
வியாழன், 10 ஏப்ரல் 2014 (15:38 IST)
நலன் குமாரசாமி இயக்கவிருக்கும் படத்தில் சூர்யாவுக்குப் பதில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். கால்ஷீட் பிரச்சனை காரணமாக சூர்யா குறிப்பிட்ட படத்தில் நடிக்கவில்லை.
சூதுகவ்வும் வெற்றிக்குப் பிறகு மை டியர் டெஸ்பரடோ என்ற கொரிய படத்தின் உரிமையை முறைப்படி வாங்கி திரைக்கதை அமைத்தார் நலன் குமாரசாமி. மை டியர் டெஸ்பரடோ 2010 Kim Kwang-sik  இயக்கத்தில் வெளியான படம். நலன் குமாரசாமியை சூர்யா அழைத்து பேசிய போது, தான் திரைக்கதை அமைத்து வைத்திருக்கும் இந்தப் படத்தைப் பற்றி அவரிடம் கூறினார். சூர்யாவும் கொரிய படத்தை பார்த்தார். படம் பிடித்ததால் நடிக்கிறேன் என அவர் சொன்னதாகவும் தகவல்.
 
ஆனால் சட்டென்று மாறியிருக்கிறது வானிலை. அஞ்சானுக்குப் பிறகு வெங்கட்பிரபு படம், அடுத்து ஹரி என்று சூர்யாவின் கால்ஷீட் டயரி இப்போதைக்கு ஹவுஸ்ஃபுல்லாக உள்ளது. அதனால் நலன் குமாரசாமியின் படத்தில் அவர் நடிக்கவில்லை. அவருக்குப் பதில் அந்த ரொமான்டிக் காமெடி கொரிய ரீமேக்கில் நடிக்கப் போகிறவர் விஜய் சேதுபதி.
 
அதற்கு முன் க்ரைம் த்ரில்லர் ஒன்றை நலன் குமாரசாமி இயக்க உள்ளார். முன்னணி நட்சத்திரங்களிடம் அதற்காக கால்ஷீட் கேட்கும் திட்டம் உள்ளது. அப்படம் முடிந்ததும் மை டியர் டெஸ்பரடோவின் ரீமேக்கை தொடங்குகிறார்.
 

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments