Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மே 1 அஞ்சானின் அட்டகாசமாக பர்ஸ்ட்லுக்

மே 1 அஞ்சானின் அட்டகாசமாக பர்ஸ்ட்லுக்
, திங்கள், 28 ஏப்ரல் 2014 (11:55 IST)
அஞ்சான் படத்தின் பர்ஸ்ட்லுக் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகிறது.
இப்போதெல்லாம் படங்களின் பர்ஸ்ட்லுக் வெளியாவதை திருவிழா போல கொண்டாடுகிறார்கள். அதற்கு கொடுக்கப்படும் பில்டப்புகளும் கொஞ்ச நஞ்சமல்ல. அஞ்சானில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல். ஒரு கதாபாத்திரம் புதிய ஹேர்ஸ்டைலுடன் உண்மையிலேயே அட்டகாசமாக உள்ளது. 
 
பொதுவாக லிங்குசாமி தனது படத்தின் அவுட்புட்டில் கவனமாக இருப்பார். மிகுந்த சிரத்தை எடுத்து அஞ்சானின் பர்ஸ்ட்லுக்கை அவர் வடிவமைத்துள்ளாராம். யுடிவி தனஞ்செயன் மகிழ்ச்சியுடன் கூடிய திருப்தியுடன் பர்ஸ்ட்லுக் குறித்து சமூகவலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
webdunia
அஞ்சானின் டாக்கி போர்ஷன் முடிவடைந்துவிட்டன. ஒரு பாடல் காட்சி மட்டும் எடுக்கப்பட வேண்டுமாம். பிறகு சில பேட்ச்வொர்க் வேலைகள். அவை முடிந்தால் படம் தயார்.
 
அஞ்சானில் சமந்தா ஹீரோயினாக நடிக்க யுவன் இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 15 சுதந்திரத்தினத்தை முன்னிட்டு படம் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil