Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேலும் ஒரு விருது வாங்கிய வைரமுத்து

மேலும் ஒரு விருது வாங்கிய வைரமுத்து
, செவ்வாய், 23 செப்டம்பர் 2014 (17:47 IST)
தேசிய விருதாக இருந்தாலும், மாநில விருதாக இருந்தாலும், தனியார் விருதாக இருந்தாலும் அவற்றை வாங்குவதில் வைரமுத்துவைப் போல் ஒரு திறமைசாலியை பார்க்க முடியாது. இப்போதுதான் வெளிநாட்டு விருது ஒன்றை வாங்கினார். இதோ இன்னொன்று.
தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தில் சிறந்து விளங்கும் அறிஞர்களுக்கு எம்.ஏ.சிதம்பரம் அறக்கட்டளை ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கௌரவிக்கிறது. இந்த விருதை வைரமுத்து இதுவரை வாங்காததே ஆச்சரியம். இந்த வருடம் சிறந்த பாடலாசிரியர் மற்றும் கவிஞருக்கான விருதை கவிப்பேரரசு வைரமுத்து வாங்கியுள்ளார்.
 
வெள்ளி கேடயத்துடன் இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகை உடைய இந்த விருதை அக்டோபர் 12 - ஆம் தேதி நடைபெறும் விழாவில் வைரமுத்துக்கு தர இருக்கிறார்கள்.
 

Share this Story:

Follow Webdunia tamil