Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதுகு வலி - வைரமுத்துவுக்கு அறுவை சிகிச்சை

முதுகு வலி - வைரமுத்துவுக்கு அறுவை சிகிச்சை
, வெள்ளி, 25 ஜூலை 2014 (10:58 IST)
முதுகு வலியால் அவதிப்பட்ட கவிஞர் வைரமுத்துவுக்கு முதுகில் நுட்பமான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 
 
வைரமுத்து தனது பிறந்தநாளை முன்னிட்டு கோவைக்கு இந்த மாதம் வந்தார். பிரமாண்டமான விழாவிலும் பேரணியிலும் கலந்து கொண்டார். சில தினங்கள் முன்பு மீண்டும் கோவை வந்தார். இந்தமுறை லயன்ஸ் கிளப்பின் அழைப்பின் பேரில்.
 
கோவை வந்த இடத்தில் அவருக்கு முதுகு வலி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவரது முதுகு தண்டுவடத்தில் எலும்புத் தேய்மானம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
 
அதனைத் தொடர்ந்து அவருக்கு முதுகு தண்டுவடத்தில் மைக்ரோ சர்ஜரி செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் வைரமுத்து நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
 
இன்னும் சில தினங்களில் அவர் வீடு திரும்புகிறார்.
 

Share this Story:

Follow Webdunia tamil