முதல்வர் தொடங்கி வைக்கும் தோமையார் திரைப்படம்!

Webdunia
வியாழன், 3 ஜூலை 2008 (20:49 IST)
இன்று சென்னை சாந்தோம் ஆலய வளாகத்தில் தோமையார் பற்றிய திரைப்படத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் கருணாநிதி!

இந்தியாவில் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பியவர் இயேசுவின் சீடர்களில் ஒருவரான புனித தோமையார். அவர் சொன்த ஊரிலிருந்து எடுத்துவந்த கல் ஓவியம், அவரது எலும்புத் துண்டு, அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் என அனைத்தும் சென்னையில்தான் உள்ளது.

கத்தோலிக்க திருச்சபை சார்பில் புனித தோமையார் குறித்த திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. சுமார் ஐம்பது கோடியில் தயாராகும் இப்படத்தில் ஹாலிவுட் நடிகர்களும் நடிக்கின்றனர்.

வரும் ஜனவரியில் தொடங்கயிருக்கும் இப்படத்தினை, தோமையாரின் நினைவு நாளான இன்று முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.

அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ. பீட்டர் அல ் ஃபோன்ஸ், ஆயர்கள் மற்றும் ஏராளமான பாதிரியார்கள் இவ்விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

தமிழின் முன்னணி நடிகர்களை படத்தில் நடிக்க வைக்கும் திட்டம் இருப்பதாக கூறினார் படத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துப்பாக்கி கொடுத்த விஜய்கூட சும்மா இருக்காரு.. சிவகார்த்திகேயனை பொளக்கும் ரசிகர்கள்

டிசம்பர் 19ல் 'அவதார் - ஃபயர் அண்ட் ஆஷ்' ரிலீஸ் : திரையரங்கு ஊழியர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் கோரிக்கை!

பிரபல நடிகையை கணவரே கடத்திய அதிர்ச்சி சம்பவம்.. மகள் என்ன ஆனார்?

நடிகையாக அறிமுகமான ’நாட்டாமை’ படத்தின் டீச்சர் நடிகை.. ஹீரோ விஜயகாந்த் மகன்..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுகிறாரா பும்ரா? என்ன காரணம்?

Show comments