Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் ஹாரிஸ் இசையில் ஸ்ருதி?

மீண்டும் ஹாரிஸ் இசையில் ஸ்ருதி?
, வியாழன், 1 ஏப்ரல் 2010 (17:58 IST)
வாரணம் ஆயிரம் படத்தில் ஹா‌ரிஸ் ஜெயரா‌‌ஜ் இசையில் பாடினார் ஸ்ருதி. அடியே கொல்லுதே என்ற அந்தப் பாடல் ரசிகர்களைப் போலவே ஹா‌ரிஸையும் கவர்ந்ததில் ஆச்ச‌ரியம் இல்லை. அவ‌ரின் டியூனும், ஸ்ருதியின் குரலும் கலந்த பஞ்சாமிர்தப் பரவசம் அடியே கொல்லுதே...

ஸ்ருதியின் குரலை மீண்டும் தனது இசையில் பயன்படுத்த ாரிஸ் திட்டமிட்டிருக்கிறார் என்பது இசையுலகின் லேட்டஸ்ட் தகவல்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் ஸ்ருதி ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தப் படத்துக்கு இசை ஹா‌ரிஸ் ஜெயரா‌‌ஜ். பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும்பட்சத்தில் படத்தில் இடம்பெறும் அனைத்துப் பாடல்களுக்கும் ஸ்ருதியின் குரலை பயன்படுத்த திட்டமிட்டுள்ளாராம் ாரிஸ்.

நல்ல முடிவு. கையில் நெய் இருக்கையில் வெண்ணெய்க்கு ஏன் அலைய வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil