Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் விஜய் இயக்கத்தில் ஆர்யா

மீண்டும் விஜய் இயக்கத்தில் ஆர்யா
, சனி, 17 மே 2014 (17:51 IST)
மகிழ்திருமேனி இயக்கத்தில் மீகாமன், எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் புறம்போக்கு, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் யட்சன் என்று மூன்று முக்கிய படங்களில் நடித்து வருகிறார் ஆர்யா. அடுத்து இவர் நடிக்கயிருப்பது ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில்.
ஏ.எல்.விஜய், இயக்கத்தில் ஆர்யா நடித்த மதராசப்பட்டணம் விஜய் இதுவரை இயக்கிய படங்களில் சிறந்த படம் என்ற பெயரை இனறளவும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதே போன்ற காதல் கதையொன்றில் மீண்டும் விஜய்யும், ஆர்யாவும் இணையவிருக்கிறார்கள். 
 
விஜய் கடைசியாக இயக்கிய சைவம் இன்னும் வெளியாகவில்லை. சைவத்தின் திரையரங்கு உரிமையை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் வாங்கியுள்ளது. மேலும், அமலா பாலுடனான தனது திருமண ஏற்பாடுகளில் விஜய் பிஸியாக உள்ளார். எனவே ஆர்யாவை வைத்து அவர் இயக்கவிருக்கும் படம் இன்னும் சில மாதங்கள் கழித்தே தொடங்கப்படும் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil