Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் வழிக்கு வந்த இது நம்ம ஆளு

Webdunia
புதன், 28 மே 2014 (17:00 IST)
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு - நயன்தாரா நடித்து வந்த இது நம்ம ஆளு சில காரணங்களால் வாரக்கணக்கில் முடங்கிக் கிடந்தது. படமே ட்ராப் என்று கிசுகிசுக்கள் பரவிய நிலையில் நேற்று மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினார் பாண்டிராஜ்.
தனது படம் ஒன்றுக்கு, காட் ஒன்லி ஜட்ஜ் ஹிம் என்று டேக்லைன் வைத்தார் சிம்பு. நூறு சதம் உண்மை. சிம்பு நடிக்கும் படம் எப்போது தொடங்கும் எப்போது முடியும் என்பதில் கடவுளுக்கே கன்பியூஷன் ஏற்படும். அந்தளவுக்கு குளறுபடிகள்.
 
இது நம்ம ஆளு படத்தை தொடங்கிய போது வாலு படம் முக்கால்வாசி முடிந்திருந்தது. கௌதம் படத்தின் படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்தது. வாலு படப்பிடிப்பை நிறுத்திவிட்டு இது நம்ம ஆளு படத்தில் சிம்பு கவனம் செலுத்தினார். படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் டி.ஆருக்காக தயாரிப்பதும் பாண்டிராஜே. பட்ஜெட் எட்டு கோடி என்கின்றன தகவல்கள். 
 

இந்நிலையில் இது நம்ம ஆளு படத்தை டீலில் விட்டு வாலு படத்துக்கு சென்றார் சிம்பு. எப்போது மீண்டும் தொடங்கும் என்பது தெரியாமலே இது நம்ம ஆளு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. வாரக்கணக்கில் இந்த வேலைநிறுத்தம் நீள, படமே ட்ராப் என்று வதந்திகள் பரவ ஆரம்பித்தன.
வாலு படத்தின் கடைசி இரு பாடல் காட்சிகளும் முடிந்த நிலையில் நேற்று முதல் இது நம்ம ஆளு படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சிம்பு. ஒரே மூச்சில் மிச்ச படப்பிடிப்பையும் நடத்திடும் வேகத்தில் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார் பாண்டிராஜ்.
 
இது நம்ம ஆளு படத்துக்கு இசையமைப்பது சிம்புவின் தம்பி குறளரசன் என்பது குறிப்பிடத்தக்கது.

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

Show comments