Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் திருநங்கையாகும் சரத்குமார்

மீண்டும் திருநங்கையாகும் சரத்குமார்
, செவ்வாய், 26 ஆகஸ்ட் 2014 (11:42 IST)
முனி 2 காஞ்சனாவை லாரன்ஸ் இந்தியில் இயக்குவதாக முடிவானதுமே எழுந்த கேள்வி, காஞ்சனாவில் சரத்குமார் நடித்த திருநங்கை வேடத்தை இந்தியில் செய்யப் போவது யார்?
காஞ்சனா படத்தின் இதயமே சரத்குமாரின் கதாபாத்திரம்தான். இந்தியின் முன்னணி நடிகர்கள் யாரேனும் நடித்தால் மட்டுமே அந்த கதாபாத்திரம் எடுபடும். கதாபாத்திரம் பேசப்பட்டால் மட்டுமே படம் ஹிட்டாகும்.
 
ஆனால் திருநங்கையாக நடிக்க யாரும் முன் வரவில்லை. எந்த நடிகரும் நடிப்பதற்கு தயாரில்லை என்றால் சரத்குமாரையே நடிக்க வைப்பது என இந்திப்பட தயாரிப்பாளர் ஏற்கனவே கூறியிருந்தார். அதன்படி இப்போது சரத்குமாரைதான் அணுகியிருக்கிறார்கள்.
 
தமிழில் லாரன்ஸ் நடித்த வேடத்தில் அஜய் தேவ்கான் நடிக்கிறார். இந்த வருட இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil